அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் முதியோர் சங்க பகல் பராமரிப்பு நிலைய திறப்பு விழா-படங்கள்


மன்னார் பேசாலை புனித.வெற்றிநாயகி ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதியோர் சங்க பகல் பராமரிப்பு நிலைய திறப்பு விழா செவ்வாய் கிழமை (11.12.2018) முற்பகல் 9.30 மணிக்கு முன்னாள் பாடசாலை அதிபரும் பேசாலை முதியோர் சங்கத் தலைவருமான கலாபூஷணம் எஸ்.ஏ.மிராண்டா தலைமையில் இவ் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் பிடெலிஸ் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.எ.மோகன்ராஸ், மன்னார் மறைமாவட்ட முதியோர் சமாச இயக்குனர் அருட்பணி.அல்பன் ராஐசிங்கம் அடிகளார் (அமதி), பேசாலை பங்குத் தந்தை அருட்பணி.எஸ்.கே.தேவராஜா அடிகளார், மன்னார் பிரதேச செயலாளர் திருமதி க.சிவசம்பு, முன்னாள் மன்னார் பிரதேச செயலாளர் ம.பரமதாஸ்  இவர்களுடன் இவ் நிகழ்வில் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இவ் சங்கத்தில் 387 முதியோர்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றபோதும் இதில் 81 பேர்கள் இறைவனடி சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.











மன்னார் பேசாலையில் முதியோர் சங்க பகல் பராமரிப்பு நிலைய திறப்பு விழா-படங்கள் Reviewed by Author on December 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.