முதன்முதலாக இறப்பர் உற்பத்தி திட்டம் வவுனியாவில் அறிமுகம்
வடமாகாணத்தில் முதற் தடவையாக வவுனியாவில் 8 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டத்தின் கொள்வனவு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் நெடுங்குளம் பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட இறப்பர் உற்பத்தித்திட்டத்தில் பெருந் தோட்ட பயிர்ச் செய்கை அமைச்சின் செயலாளர் கலந்துகொண்டு குறித்த கொள்வனவு நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் இறப்பர் செய்கையின் பணிப்பாளர் நாயகம் ஆர். வி. பிரேமதாசா, தோட்டத் தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சன், வவுனியா தெற்கு சிங்களப்பிரதேச செயலாளர் ஆர்.ஜானக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் இறப்பர் உற்பத்தி பயிர்ச் செய்கை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
முதன்முதலாக இறப்பர் உற்பத்தி திட்டம் வவுனியாவில் அறிமுகம்
Reviewed by Author
on
February 09, 2019
Rating:

No comments:
Post a Comment