தீவிரவாத தாக்குதல்! 64 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு -
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் இம் மாதம் 26ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 9ம் மாதம் 26ம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
குறித்த வழக்கில் 60ஆண்களும் 4 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தாக்குதல்! 64 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு -
Reviewed by Author
on
September 13, 2019
Rating:

No comments:
Post a Comment