வட்டுக்கோட்டையில் சிறுமி துஸ்பிரயோகம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆனணக்குழுவின் யாழ்ப்பாண அலுவலுகத்தின் நடவடிக்கையின் மூலமே வெளிகொணரப்பட்டுள்ளது.
இச்சிறுமி 12 வயது வயதிலிருந்தே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார் என மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த கனகராஜ் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தி குறிப்பில்,
கடந்த 24 ஆம் திகதி அன்று இச்சிறுமி எமது அலுவலகம் வருகைதந்து தனக்கு ஏற்பட்ட துஷ்பிரயோகத்தை முறையிட்டார்.
எமது அலுவலகம் துரிதமாக செயற்பட்டு அன்றைய தினமே வடமாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஊடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலயே சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 27, 2025
Rating:


No comments:
Post a Comment