தமிழரசுக்கட்சியை பாதுகாக்க ஒன்றாக திரண்ட தாய்குலம் – விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்
இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா
நினைவுத்தூபியில் இன்று (9) மலரஞ்சலி செலுத்திய பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... “தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சி,
இந்த கட்சி ஒருபோதும் தனது நிலையிலிருந்து மாறக்கூடாது”
நாங்கள் இருக்கின்ற இடம் தூய்மையாக இருக்க வேண்டும். நாங்கள் வளர்க்கின்ற மரம் செழிப்பானதாக இருக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகள் நேர்மையானதாக இருக்க வேண்டும். நாங்கள் எடுக்கின்ற முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது...
.

No comments:
Post a Comment