சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான டெங்கு நோயாளர்களில் அதிக சதவீதம் 5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களாகும் என்பதை சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன் ஊடாக பாடசாலைச் சூழலை நுளம்புகள் இல்லாமல் பாதுகாப்பாக பேண் வேண்டியது தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017 சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இதில் குறிப்பிட்டுள்ள பின்வரும் செயன்முறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன என்பதோடு மாணவர்கள் மற்றும் கல்வி/கல்விசாரா ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக பின்வரும் அறிவுறுத்தல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு
Reviewed by Vijithan
on
June 05, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 05, 2025
Rating:


No comments:
Post a Comment