அண்மைய செய்திகள்

recent
-

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுத்த அமைச்சர்

தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருதனாமடத்தில் மரக்கறி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார உரிமையாளர்கள் கௌரவ அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைப்பு.. இதில் வியாபாரிகளான உதயராஜ் (உதயன்) மற்றும் முருகன் ஆகியோரின் தலமையில் கலந்து கொண்டார்கள் ஆளுமை அற்ற வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகள் பல வறிய வியாபாரிகளை பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் 08.11.2020 அன்று அமைச்சர் டக்கிளஸ் தேவனாந்தா நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதோடு வியாபரிகளுடனும் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார் மேலும் குறித்த இவ்விடயம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட 48 வியாபரிகளுடம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார் .

அதற்கமைய இன்றைய தினம் 09.11.2020 அன்று உள்ளூராட்சி ஆணையாளரால் விசாரணை நடத்தப்பட்டு அதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுத்தார்.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுத்த அமைச்சர் Reviewed by Author on November 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.