அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாண சம்பவம் பேரதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் கண்டணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த செய்தி தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் அவர் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.மேலும் அன்றைக்கு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது என்றும் இன்றைக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவிடம் அழிக்கப்பட்டிருக்கிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 அத்தோடு ஒற்றை இலங்கைக்குள் எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண சம்பவம் பேரதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் கண்டணம் Reviewed by Author on January 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.