சிகாகோவில் 13 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை
சிறுவன் ஆயுதம் வைத்திருந்ததாகவும் ரூபன்ரோமன் என்பவருடன் தப்பி ஓடியதாகவும் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கியை மீட்டதாகவும் சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடம் டோலிடோ சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அருகில் இருந்த வேலியின் பின்னால் துப்பாக்கியை வீசியதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி டான்ட் என்ற கறுப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சிறுவன் சுட்டுக் கொல்லப்படும் காணொளி வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு கறுப்பின வாலிபர் ஜார்ஜ் ஃப்ளொய்ட் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
சிகாகோவில் 13 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை
Reviewed by Author
on
April 17, 2021
Rating:
Reviewed by Author
on
April 17, 2021
Rating:


No comments:
Post a Comment