நுவரெலியாவில் 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து; 20 பேர் காயம்
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 20 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 20 பேரும், ஹைய்பொரஸ்ட் வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் இராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நுவரெலியாவில் 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து; 20 பேர் காயம்
Reviewed by Author
on
April 29, 2021
Rating:

No comments:
Post a Comment