மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை இன்று திறப்பதற்கு அனுமதி
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின்படி எந்தவிதமான ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்கள் ஆகியவை இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த நடைமுறை சுகாதார அமைச்சினால், சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்.
இதேவேளை இன்று காலையில் இருந்து மாலை 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தக உரிமையாளர்கள் வர்தக நிலையம் திறந்திருக்கும் நேரம் கண்டிப்பாக சுகாதார அறிவுறுத்தலை பேணி, நுகர்வேரை அதிகமாக உள்வாங்காது முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்கவேண்டும் என்பதுடன் கை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
இந்த செயற்பாடுகளை மேற்கொள்ளாத வர்த்தகநிலைய உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை இன்று திறப்பதற்கு அனுமதி
Reviewed by Author
on
June 28, 2021
Rating:

No comments:
Post a Comment