ஆசியாவில் மூன்றாவது இடத்தை பிடித்த இலங்கை!
2025 எழுவர் கொண்ட ஆடவருக்கான ஆசிய ரக்பி கிண்ண தொடரில் மூன்றாவது இடத்திற்காக இன்று (19) மாலை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்திற்கான தீர்க்கமான போட்டியில் சீனாவை 19-14 என்ற கணக்கில் தோற்கடித்து இந்த வெற்றியை பதிவு செய்தது.
அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, அரையிறுதியில் வலுவான ஜப்பானிடம் 12-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
இதன் விளைவாக, இலங்கை மூன்றாவது இடத்திற்காக விளையாட வேண்டியிருந்தது.
இந்தப் போட்டி கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் இடம்பெற்றது.
ஆசியாவில் மூன்றாவது இடத்தை பிடித்த இலங்கை!
Reviewed by Vijithan
on
October 19, 2025
Rating:

No comments:
Post a Comment