இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் வயோதிப தாய் மரணம்.
இந்த நிலையில் குறித்த இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு : அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.
-இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய வயோதிப தம்பதிகளான இருவரும் படகு மூலம் கடந்த மாதம் (27) ஆம் திகதி அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையை சென்றடைந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் வயோதிப தாய் மரணம்.
Reviewed by Author
on
July 03, 2022
Rating:

No comments:
Post a Comment