அண்மைய செய்திகள்

recent
-

உரிய வேலைத்திட்டம் இல்லையேல் 2027 வரை மின் துண்டிப்பு தொடருமென எச்சரிக்கை!

நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். 

 இரண்டாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விடயத்துக்கு பொறுப்பானவர்கள் இன்னும் சமர்பிக்காதுள்ளனர். 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் அடிக்கடி மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களுக்கான மின் துண்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


உரிய வேலைத்திட்டம் இல்லையேல் 2027 வரை மின் துண்டிப்பு தொடருமென எச்சரிக்கை! Reviewed by Author on August 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.