அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகி சாதனை..

 மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகியுள்ளார். 




1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.



விமானி உரிமம்


தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.





மேலும் ஸ்பெயினின் பர்கோஸ் நகரில் உள்ள FLYBY AVIATION ACADEMY யில் இணைந்து ATPL ஒருங்கிணைந்த பாடநெறியில் அனைத்து அதிகாரப்பூர்வ ATPL தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ATPL என்பது யாதெனில் ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமமாகும்.


இது ஒரு விமானி பெறக்கூடிய அதிகமான தரமான உரிமமாக இருப்பதுடன் இவ் உரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது.





மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகி சாதனை.. Reviewed by Vijithan on July 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.