பிரமாண்டமாக இடம் பெற்ற மன்னார் பிறீமியர் லீக் இறுதி போட்டி
இந்த நிலையில் மன்னார் MARTYRS அணி மற்றும் ISLAND FC அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் இரு அணிகளுக்குமான இறுதி போட்டி இடம் பெற்றது
விறு விறுப்பாக இடம் பெற்ற குறித்த போட்டியில் இரு அணியினரும் தலா ஒரு கோல் வீதம் பெற்றிருந்த நிலையில் தண்ட உதை மூலாமக வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது
தண்ட உதையில் அதிக கோல்களை பெற்று MARTYRS அணி வெற்றி பெற்று 1000000 ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது
குறித்த போட்டிக்கு விருந்தினர்களாக வருகை தந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய சிரேஸ்ர உபதலைவரும் முன்னால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவருமான ரஞ்சித் ரொட்றி கோ மற்றும் முன்னால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் அனுரடி சில்வா மற்றும் மன்னார் உதைபந்தாட்ட ஜாம்பவான் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லாஸ் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஞானபிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் இணைந்து வெற்றி கிண்ணங்கள் மற்று பதக்கங்களை வழங்கி வைத்தனர்
குறித்த சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற ISLAND FC அணிக்கு ஐந்து லட்சம் ரூபாவும் மூன்றாம் இடத்தை பள்ளிமுனைFC அணிக்கும் மூன்று இலட்சம் ரூபாவும் பதங்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது
அதே நேரம் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருடம் தேசிய அணிக்கு தெரிவாகிய வீரர் மற்றும் மன்னார் உதைபந்தாட்ட ஜாமப்வான் அருட்சகோதர் ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது
பிரமாண்டமாக இடம் பெற்ற மன்னார் பிறீமியர் லீக் இறுதி போட்டி
Reviewed by Author
on
August 21, 2022
Rating:

No comments:
Post a Comment