அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் மீண்டும் குடியேற கிரீன் கார்டுக்கு கோட்டா விண்ணப்பம்

மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார். அதற்கமைய, அவர் அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் மூலம் வாய்ப்பு பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கோட்டாபயவின் மனைவியான அயோமா ராஜபக்ஷ இன்னும் அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால், முன்னாள் ஜனாதிபதி கிரீன் கார்ட் லொட்டரிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர். அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் இதற்கான விண்ணப்ப நடைமுறையை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  தாய்லாந்தில் தங்கியிருப்பு 

தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள கோட்டாபய, குறைந்த பட்சம் நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இப்படி ஒரு பரிதாப நிலை! | The Pitiful Condition Of Gotabaya இருந்த போதிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அவர் இலங்கை திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை ரத்துச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மீண்டும் குடியேற கிரீன் கார்டுக்கு கோட்டா விண்ணப்பம் Reviewed by Author on August 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.