அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட சம்பந்தரின் வெண்கல சிலை
தமிழகத்தின் கும்பகோணம் அருகேயுள்ள தாண்டந்தோட்டம் நாதனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 1971ம் ஆண்டு திருடப்பட்ட சிலை குறித்து கடந்த 2019-ம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது. தஞ்சையிலிருந்து கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தரின் வெண்கல சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து சிலையின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து தேடிய பொலிஸார் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் சிலை இருப்பதை கண்டறிந்தனர்.
யுனெஸ்கோ ஒப்பந்தப்படி சிலையை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட சம்பந்தரின் வெண்கல சிலை
Reviewed by Author
on
August 20, 2022
Rating:

No comments:
Post a Comment