அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை

 முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை! தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில்! முத்துஐயன்கட்டு உள்ளிட்ட பாரிய நீர் பாசன குளங்களின் வான் கதவுகள் திறப்பு.






முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நேற்று முந்தினம் (08)  முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில்   தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் நீர் வரத்தை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டு  குளத்தின் நான்கு வான்கதவுகளும்  நேற்று (09)  காலை முதல் ஆறு அங்குல அளவில்  திறந்துவிடப்பட்டிருந்ததோடு நீர் வரத்து அதிகரித்த நிலையில்  இன்று (10) நான்கு வான்கதவுகளும் ஒரு அடி மூன்று அங்குல அளவில் திற்ந்துவிடப்பட்டுள்ளது.    


இதேபோன்று தண்ணி முறிப்பு குளத்தின் மூன்று வான் வான்கதவுகளும்  திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குளங்கள் நிறைந்து காணப்படும் நிலையில் குளங்கள் பல வான் பாய்கின்றன இதேவேளை இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில்   தாழ்நிலை பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது


தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தினால்  ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்ற நிலைமையில் அனைத்து குளங்களும் வான் பாய்கின்ற நிலைமைகள் உருவாகி இருக்கின்றது எனவே தொடர்ச்சியாக மழை பெய்கின்ற போது இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கலாம் எனவே  தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.











முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை Reviewed by வன்னி on January 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.