முல்லைத்தீவில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
விதையனைத்தும் விருட்சமே ஊடாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இனைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) இடம்பெற்றது
கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்து விதையனைத்தும் விருட்சமே என்ற தொனிப் பொருளிலே ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டத்தில் தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பல்வேறு சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்
அந்த வகையிலே இந்த விதையனைத்தும் விருட்சமே செயல்திட்டத்தின் ஊடாக வருடம் தோறும் அதிர்ஷ்டலாபச் சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை கொண்டு வடகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கற்றல் செயல்பாடுகளுக்கான உதவியை எதிர்பார்த்து இருக்கின்ற மாணவர்களுக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட அதிர்ஷ்டலாப சீட்டு நிதியின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) மாலை 3 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட இனைப்பாளரும் ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறை ப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்சி. சர்மி , கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சு.விக்னேஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர்இ.ஒழித்திலகன், கரைதுறைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் த.பிருந்தா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ப. நளினா மற்றும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

No comments:
Post a Comment