சாதனை படைத்துள்ள மன்/ முருங்கன் மத்திய கல்லூரி மாணவி..
சாதனை படைத்துள்ள மன்/ முருங்கன் மத்திய கல்லூரி மாணவி..
மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் தரம் 13 இல் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவி செல்வி வி. டினி அபேகமவளாகம் பத்ரமுல்ல கொழும்பில் இடம் பெற்ற
அனைத்து இலங்கை பாடசாலை ரோபோட் மற்றும் புத்தாக்க போட்டியில் " பார்வையற்ற அதேசமயம் கேட்கும் திறன் அற்றவர்களை வழி நடத்தும் ரோபோ வை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்
தொழில்நுட்பக் கல்வி பிரிவு, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போட்டியில் ரோபோட்டிக் பிரிவு உடல்நலம் மற்றும் மருத்துவம் என்னும் தலைப்பில் இவர் பங்கு பெற்று இருந்தார் குறித்த மாணவி இந்த கண்டுபிடிப்பின் மூலம் வலய மட்டத்தில் முதலிடத்தையும் மாகாணம் மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் உடல்நலம் மற்றும் மருத்துவ பிரிவில் நான்காம் இடத்தையும் தேசிய ரீதியில் ஒட்டுமொத்தமாக எட்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு இலங்கையின் சிறந்த பெண் விருது பெற்றுக் கொண்டுள்ளார் முருங்கன் மத்திய கல்லூரியில் இத்துறையில் பங்கு பற்றி சாதனை படைத்த குறித்த மாணவி செல்வி டினி முதல் பெண் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் குறித்த மாணவி பரிகாரிகண்டல் கிராமத்தைச் சேர்ந்தவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment