அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்

 குவைத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இலங்கையை சேர்ந்த இளைஞன் இன்று நாடு திரும்பியுள்ளார்.


ராஜாங்கணை யாய 11 பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சாகர லக்ஷ்மன் திலகரத்ன என்ற இலங்கையரே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.


குவைத்தில் சிற்றுண்டிச்சாலையில் உணவு விநியோக பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது.


துப்பாக்கி சூடு

சிற்றுண்டிச்சாலைக்கு வந்த குவைத் நாட்டவர் ஒருவர் உணவு தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இலங்கையர் காயமடைந்தார்.



கடந்த ஜனவரி மாதம் அவர் குவைத் நாட்டிற்கு குறித்த வேலைக்கென சென்றுள்ளார்.

உயிராபத்தான சம்பவத்திற்கு முகம்கொடுத்த சாகரவிற்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை. அவர் எவ்வித பணமும் இன்றியே இன்று நாடு திரும்பியுள்ளார்.




வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம் Reviewed by Author on July 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.