மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் பெயரிடப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை இறக்குவாணையில் திறப்பு
இலங்கை வரலாற்றில் சினிமாத்துறையில் ஈடுபட்டு இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதிக்கு சாதனை பெற்றுத்தந்து, தனது நாமத்தை நிலைநிறுத்தி மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜ் நினைவாக இறக்குவானை பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு 'தர்ஷன் தர்மராஜ் ஒழுங்கை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த வீதிக்கான பெயர்ப்பலகை இன்று (27) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளருமான எஸ்.ஆனந்தகுமார் கலந்துகொண்டிருந்தார்.
மேலும், கொடக்கெவல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரியந்த பண்டார, இருக்குவானை பரியோவான் தேசிய பாடசாலையின் அதிபர், மத தலைவர்கள், தர்ஷன் தர்மராஜின் குடும்பத்தவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Reviewed by Author
on
July 27, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment