இலங்கையில் 10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த புழுவால் அதிர்ச்சி
இலங்கையில் முதன்முறையாக 10 வயதான சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 70cm நீளத்தை விடவும் அதிகமான இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குரங்குகளால் பரவும் நாடாப்புழு
கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரங்க தொலமுல்லா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை நிபுணர் ரோஹித முத்துகல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை மருத்துவ ஆய்வக விஞ்ஞானி துஷார தந்திரிகே மேற்கொண்டார்.
இந்த வகை நாடாப்புழு குரங்குகளால் பரவுகிறது. நாடாப்புழு முட்டைகள் குரங்கின் மலத்துடன் கலந்து மண்ணில் உள்ள ஒரு சிலந்திப் பூச்சியால் உட்கொள்ளப்படுகின்றன.
பின்னர் நாடாப்புழு இனப்பெருக்கத்தினை செய்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற கழுவப்படாத உணவுகளை சாப்பிட்ட பின்னர் இந்த வகை புழு குரங்குகளால் பரவுகிறது.
வயது வந்த நாடாப்புழுக்கள் மனித சிறுகுடலில் சுமார் இரண்டு ஆண்டுகள் வாழலாம். குரங்கு நாடாப்புழு இருந்தால், அதன் அறிகுறிகளில் இடைவிடாத வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அடிவயிற்றின் கீழ் அரிப்பு, பதட்டம் மற்றும் எடை இழப்பு ஆகியவை ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment