அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

 மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


542 ஆவது படைப் பிரிவு அதிகாரி  மேஜர் விக்டர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற

குறித்த நிகழ்வில்  கலந்து கொண்ட பொதுமக்களுக்கு  கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து  பொது மக்கள்  இராணுவத்தினருடன் இணைந்து கட்டுக்கரை குளத்தில் இருந்து  இலுப்பை குளம்  மாதோட்டம் மற்றும் மக்களின் வயல்களுக்கு  செல்லுகின்ற நீர் செல்லும் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


 குறித்த சுத்தம் செய்யும் பணிக்கு மன்னார் பிரதேச சபையின்   ஜே.சி.பி மற்றும் உழவு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.


 மேலும் திணைக்கள அதிகாரிகள்  பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் இணைந்து  கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது











மன்னார் உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் முன்னெடுப்பு. Reviewed by Vijithan on May 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.