கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (25) காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றன.
குறித்த சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தினால் குறித்த மரணம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி குற்றத்தடுப்புப் பிரிவினர் பூர்வாங்க விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Reviewed by Vijithan
on
May 25, 2025
Rating:

No comments:
Post a Comment