மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கியராச்சியத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கில் விளக்குமாறு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு.
மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கியராச்சியத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கு We Can மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் விளக்குமாறு உற்பத்தி நிலையம் புதன்கிழமை (21) மாலை வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தொழில்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.டி.அரவிந்தராஜ்,வடமாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் ,அடம்பன் பங்குத்தந்தை சீமான் அடிகளார்,மன்னார் நலன்புரி அமைப்பு ஐக்கியராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன்,இ மன்னார் நலன்புரி அமைப்பு ஐக்கியராச்சியத்தின் பொருளாளர் தேவசகாயம் கில்மன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை திணைக்கள அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

No comments:
Post a Comment