கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று(28) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன்போது குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணி நிறைவில் 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப்பணி நிறைவு செய்யப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றத்திற்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது
அத்தோடு சட்ட வைத்திய அதிகாரிகளால் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வுகளின் இறுதி அறிக்கையும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது
இவ்வாறான பின்னணியில் குறித்த சான்றுப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு 2025.08.03 அன்று காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஊடகங்களில் குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடமிருந்து குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது
இவ்வாறான பின்னணியில் இதனுடைய இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில் குறித்த வழக்கு நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment