35 வருட காத்திருப்பு... யாழ் பலாலி இராஜ ராஜேஸ்வரி ஆலயத் திருவிழா; பிரதான பாதை திறக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.
தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை...
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை நேரில் சந்தித்து, இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிரதான பாதையை, ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு திறந்து வைப்பது குறித்து ஆராயப்பட்டது.
இதன் விளைவாக, ஆலயத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நேரக் கட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குறித்த பாதையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
July 08, 2026
Rating:


No comments:
Post a Comment