கனடாவில் கொலை முயற்சி குற்றச்சாட்டில் தமிழ் இளைஞன் பொலிஸில் சரண்
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த 35 வயதான தமிழ் இளைஞர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமல் மோகன் என்ற குறித்த இளைஞர், தன்னிச்சையாக முன்வந்து உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிராம்ப்டன் பகுதியில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார்.
கத்திக்குத்துக்கு இலக்கான அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் விமல் மோகனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்த பொலிஸார், அவருக்கு எதிராகக் கொலை முயற்சி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த விமல் மோகன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கனடாவில் கொலை முயற்சி குற்றச்சாட்டில் தமிழ் இளைஞன் பொலிஸில் சரண்
Reviewed by Vijithan
on
October 15, 2026
Rating:
Reviewed by Vijithan
on
October 15, 2026
Rating:


No comments:
Post a Comment