நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
>நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கப்பல் சேவை தொடங்குவதாக திட்டமிடப்பட்டது.
இது குறித்து சுபம் ஃபெர்ரி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை சர்வதேச கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த சேவை இந்த வாரம் தொடங்க இருந்தது. ஆனால் இப்போது தாமதமாகி உள்ளது.
தற்போது காலநிலை மாறுபாடுகளின் காரணமாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் தாக்கத்தால் காங்கேசன்துறைமுகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருப்பதாலும் கப்பல் சேவை தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்
Reviewed by Vijithan
on
December 07, 2025
Rating:


No comments:
Post a Comment