அண்மைய செய்திகள்

recent
-

13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபரை தேடும் பொலிஸார்

 காலிமுகத்திடல் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி 13 வயதுடைய சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.


கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




சந்தேகநபரின் மாதிரிச் சித்திரம்


சந்தேகநபரின் மாதிரிச் சித்திரம் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



தகவல்களைக் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 071-8591560 என்ற இலக்கத்திற்கோ அல்லது கோட்டை பொலிஸ் நிலையத்தின் 011-2432635 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.






13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபரை தேடும் பொலிஸார் Reviewed by Vijithan on September 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.