அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு.

 மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில்

நேற்று (26.05)  செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி  விழுந்து ஏற்பட்ட  தீ விபத்தில்

மூன்று பிள்ளைகளின் தாய்   உயி*ரிழந்துள்ளார். 

ரிஷாலா பானு (46)  என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


 சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்


அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால்  மண்ணெண்ணெய் விளக்கைப்  பயன்படுத்தி வந்துள்ள நிலையில், விளக்கை ஏற்றும் போது  குறித்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


 உயி*ரிழந்த பெண்ணிற்கு வலிப்பு நோய் தொடர்ச்சியாக இருந்து வந்ததாகவும்  சம்பவத்தின் போது அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் வீட்டிலே இருக்கவில்லை  எனவும்,  குறித்த வீட்டில் இருந்து புகை வருவதை அவதானித்து  அயலவர்கள் சென்று பார்க்கையில்  அப்பெண்  தீயில் எரிந்து  உயிரிழந்திருந்ததாகவும் 

உறவினர்கள்  தெரிவிக்கிக்கின்றனர்.


சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு. Reviewed by Vijithan on May 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.