அண்மைய செய்திகள்

recent
-

காவந்திஸ்ஸ யானை உயிரிழந்தது!

 அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது.

 

நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

கல்கமுவ பகுதியில் வாழ்ந்து வந்த இந்த யானையின் சுகாதார நிலைமை தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்தன.

 

முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயத்திற்கு கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

 

காலில் ஏற்பட்ட காயம் ஓரளவு குணமடைந்திருந்த போதிலும், கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளாமை உள்ளிட்ட ஏனைய நோய் அறிகுறிகள் யானையிடம் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

காவந்திஸ்ஸ யானை, இலங்கையிலுள்ள மிகப்பெரிய மற்றும் மிக உயரமான தந்த யானைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





காவந்திஸ்ஸ யானை உயிரிழந்தது! Reviewed by Vijithan on October 16, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.