மன்னாரில் சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.
மன்னார் மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு இன்று (12) மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பொறியியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி. வலன்டைன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேலும், உதவிக் கல்விப் பணிப்பாளின் வழிகாட்டுதலிலும், பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு டனும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால கல்வி பயணத்திற்கு ஊக்கமளிப்பதையும், ஏனைய மாணவர்களையும் சிறந்த கல்விச் சாதனைகளை நோக்கி முன்னேற தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கமளிக்கும் இத்தகைய முயற்சிகள் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வலு சேர்க்கின்றன.
Reviewed by Vijithan
on
October 12, 2026
Rating:



.jpeg)


No comments:
Post a Comment