அண்மைய செய்திகள்

recent
-

வங்காலையில் ஒரு தொகை பயனாளிகளுக்கு சம்பத் வங்கியால் வாழ்வாதாரத்திற்கான கடன் வசதி திட்டம்-படங்கள் இணைப்பு.


வங்காலையில் ஒரு தொகை பயனாளிகளுக்கு சம்பத் வங்கியால் வாழ்வாதாரத்திற்கான கடன் வசதி திட்டம்
இந்த கடன் வசதி வழங்கி வழங்கும் அங்குரார்பன நிகழ்வானது வங்காலை ஆலய கேட்போர் கூடத்தில் குருமுதல்வர் விக்டர் சோசை அவர்களின் தலைமையில புதன் கிழமை 31.10.2012; அன்று நடைபெற்றது.

வங்காலை மக்கள், குருமுதல்வர் மூலமாக மேற்கொண்ட விடாமுயற்சியினூடாக சம்பத் வங்கியினூடாக இக்கடன் வசதியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வங்கியின் முகாமையாளரான திரு. தங்கராஜ குகநேசன் (குகன்) அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இக்கடனுதவியானது தெரிவு செய்யப்பட் பயனாளிகள் குழுவொன்றுக்கு தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குருமுதல்வர் அவர்கள் உரையாற்றுகையில் இந்த பயனாளிகளின் வேண்டுகோலுக்கிணங்கவே அவர் இந்த வசதியினை பெற்றுக் கொடுப்பதற்காக பரிந்துரை செய்ததாகவும், இதிலுள்ள அனைவரும் தமது வாழ்வாதாரத்தில் மிகவும் துடிப்புடன் செய்பவர்கள் என்பதனையும் வங்கியின் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டினார்.
வங்கியின் பிதாந்தி முகாமையாளர் திரு. அன்ரன் நிதர்சன் தனது உரையில் தான் மன்னாருக்கு பலவருடமாக இருந்த கலவர சூழ்நிலையின் பின்னர் மன்னாருக்கு வந்தமையையிட்டு சந்தோஷமடைவதாகவும் தற்போது மக்களாகவே இவ்வாறான முயற்சிகளில் ஒரு குழுவாக செயற்படுவதையிட்டும் தான் பெருமைப்படுவதாகவும் கூறியதுடன் கடனை திருப்பியளிக்கும் முறைபற்றியும் விழக்கமளித்தார். பின்னர் கடனுதவிக்கான முதலாவது காசேலையினை குருமுதல்வர் விக்டர் சோசை அவர்கள் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் சம்பத் வங்கியின் வன்னி பிராந்திய நிறைவேற்று அதிகாரிகளான திரு.குகதாசன் கோகுலன் மற்று ஆனந்தன் ரட்ணசபாபதி ஆகியோரும் பங்குபற்றினர்.





வங்காலையில் ஒரு தொகை பயனாளிகளுக்கு சம்பத் வங்கியால் வாழ்வாதாரத்திற்கான கடன் வசதி திட்டம்-படங்கள் இணைப்பு. Reviewed by NEWMANNAR on November 02, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.