அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சையில் எட்டாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு முனேறிய வட மாகாணம்

சென்ற ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் எட்டாவது இதத்திற்குத் தள்ளப்பட்டிருந்த வடக்கு மாகாணம் இவ்வருடம் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை பாராட்டப்படவேண்டியது. இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களை மனநிறைவுடன் பாராட்டுகின்றோம்.

இது தொடர்பில் செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்:

கல்வியால் உயர்ந்திருந்த வடக்கு மாகாணம் கீழ்நிலைக்குச் சென்று மீண்டும் உயர்ச்சிபெறத் தொடங்கியிருக்கின்றது. இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் 2013ஆம் ஆண்டு 15820 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களில் 131மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்றுள்ளனர். அதேவேளை 356மாணவர்கள் எந்தப்பாடத்திலும் சித்திபெறவில்லை. அகில இலங்கை ரீதியில் வவுனியா மாவட்டம் மூன்றாம் இடத்திலும், மன்னார் மாவட்டம் நான்காம் இடத்திலும், யாழ்மாவட்டம் எட்டாம் இடத்திலும், முல்லைத்தீவு மாவட்டம் இருப்பத்து நான்காம் இடத்திலும், கிளிநொச்சி மாவட்டம் இருப்தைந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்குத் தோற்றியோரில் 5838 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகுதியிற்றவர்களாக உள்ளனர். இவர்களின் பெற்றோர் மிகுந்த அக்கறையுடன் தொழிற்பட்டு இரண்டாவது தடவையில் அவர்கள் சித்திபெறுவதற்கு வழிகாட்டவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். அது மட்டுமன்றி பிள்ளைகளின் ஒழுக்க நடைமுறைகளில் ஆசிரியர்களோடு இணைந்து பெற்றோரும் செயற்படுவது பெறுபேறுகள் அதிகரிப்பதற்கு உந்துசக்தியாக இருக்கும்.

எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து நிற்கும் தமிழர் பிரதேசங்களில் கல்வியை அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இங்ஙனம்,
என்றும் தங்களின் தொழிற்சங்கப் பணிக்காக,

சரா.புவனேஸ்வரன்.
ஒப்பம்: வி.ரி.சகாதேவராஜா.

தலைவர்.
பொதுச் செயலாளர்.
O/L பரீட்சையில் எட்டாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு முனேறிய வட மாகாணம் Reviewed by NEWMANNAR on April 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.