இனம் தெரியாதோரால் நேற்று தள்ளாடி –திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைப்பு.
மன்னார் தள்ளாடி –திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில்(ஏ-32) அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை நேற்று சனிக்கிழமை(5) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தள்ளாடி- திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் பல வருடங்களாக அமைந்துள்ள குறித்த விநாயகர் சிலையினை திருக்கேதீஸ்வர கிராம மக்கள் பாதுகாத்து வந்தனர்.குறித்த வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் குறித்த விநாயகர் சிலையில் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த சிலை நேற்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியூடாக சென்ற மக்கள் அதனை கண்டு உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்திய நிலையிலே குறித்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சததிற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து மத பிரதம குரு ஐங்கர சர்மா குருக்கள் தெரிவித்தார்.
இனம் தெரியாதோரால் நேற்று தள்ளாடி –திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை உடைப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment