மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் அரச திணைக்களங்கள் இணைந்து ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகள்- படங்கள்
தமிழ்,சிங்கள புத்தாண்டையொட்டி மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் அரச திணைக்களங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் நேற்று சனிக்கிழமை(5) மன்னார் முருங்கன் மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
தமிழ்,சிங்கள புத்தாண்டு நிகழ்வின் ஆராம்ப நிகழ்வுவான மரதன் ஓட்டப்போட்டி நேற்று(5) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து காலை 9:30 மணியளவில் முருங்கன் மாகாவித்தியாலயத்தில் ஏனைய போட்டிகள் வைபவரீதியாக ஆரம்பமானது.குறித்த நிகழ்வுகளை அமைச்சர் றிஸாட் பதியுதீன் வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.
மரதன், முட்டி உடைத்தல்,கிறீஸ் மரம் ஏறுதல், பனிஸ் சாப்பிடுதல்,தலையணை சண்டை,கரண்டி ஓட்டம், கபடி (ஆண்,பெண்) போட்டி, மர்ம மனிதனை கண்டுபிடித்தல், யானைக்கு கண்வைத்தல், கயிறு இழுத்தல் (ஆண்கள் பிரிவு), கயிறு இழுத்தல் (பெண்கள் பிரிவு), தேங்காய் துருவுதல், வினோத உடை போட்டி, அழகுராணி போட்டி, சங்கீத கதிரை மற்றும் கலைநிகழ்சிகள் நடைபெற்றது.
இதேவேளை மாட்டு வண்டி சவாரி கறுக்காக்குளத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
இருதி நிகழ்வுகள் மாலை 5 மணியளவில் முருங்கன் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.இதன் போது பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய கலந்து கொண்டார்.
இதன் போது குறித்த நிகழ்வுகளில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல், மன்னார் மாவட்ட உதவி செயலாளர் எஸ்.பரமதாஸ், மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு,ஆகிய 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மன்னார் பிரதேச செயலகத்தின் கிராம சேவகர்களுக்கான நிர்வாக உத்தியோகஸ்தர் ராதா பெனாண்டோ, மன்னார் உதவி பொலிஸ் அத்தியகட்சகர் ஜ.பி.ரி.சுகதபால, இராணுவ உயர் அதிகாரிகள்;,கடற்படை உயர் அதிகாரிகள், கலாச்சார பிரிவு அதிகாரிகள்,அரச திணைக்கள பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு போட்டிகளில் வெற்றியீட்டிய வீரவீராங்களைகளுக்கு அதிதிகளினால் பரிசுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தனது சொந்த மொழியான சிங்கள மொழியை விட தமிழ் மொழியில் கதைத்து அனைவரையும் மகிழ்வித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் அரச திணைக்களங்கள் இணைந்து ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகள்- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment