அண்மைய செய்திகள்

recent
-

முக்கிய புள்ளிகள் வெளியில்! புனர்வாழ்வு அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் விசாரணையா? கோடீஸ்வரன் பா.உ

கைது செய்யப்படவேண்டிய விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய புள்ளிகள்வெளியில் உல்லாசமாக வாழக்கை நடத்த புனர்வாழ்விற்கு உள்ளாக்கப்பட்ட போராளிகள்கைது செய்யப்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்தெரிவித்தார்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து புனர்வாழ்வுபெற்று தனது வீட்டில் வாழ்ந்து வந்த ராம் அவர்களின் கைது தொடர்பாக விடுத்துள்ளஅறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறுதியில் தனது குடும்பததினையும் இழந்துபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளியான தளபதி ராம் அவர்களது கைது எந்தவிதத்திலும்ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிகழ்வாகும். அவரது கைதானது ஒரு மனித உரிமைமீறலாகும்.

காரணம் இயக்கத்தில் இருந்து அரசாங்கத்தினால் புனர்வாழ்வுஅளிக்கப்பட்டு தனது குடும்பத்துடன் தனதுழைப்பில் திருக்கோயிலில் வாழ்ந்து வந்தசந்தர்ப்பத்தில் இவரை கைது செய்ததென்பது ஒட்டு மொத்த புனர்வாழ்வு அளிக்கப்பட்டதமிழ் இளைஞர், யுவதிகளை ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தனது மனைவி, பிள்ளைகளை இழந்துஇறுதிக் காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தான்என்றும் தன்னுடைய வேலை என்றும் விவசாயத்தினை செய்து வாழ்ந்து வருகின்றசந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக கைது செய்வதென்பது ஒரு மனிதாபிமானமற்றசெயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.

நல்லாட்சி என்று கூறும் இந்த ஆட்சிக் காலத்திலும் மகிந்த ஆட்சியில்இருந்ததைப் போன்ற செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கைஇழந்து புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் ஒருஅச்சமானதும், மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழ்நிலையில் வாழ வேண்டிய ஒருதுர்ப்பாக்கிய நிலை உருவாகும்.

இதன் காரணமாக தங்களது வேலைகளை தாங்கள் சுயாதீனமாகசெய்ய முடியாமல் போவதுடன் தங்களது குடும்ப வாழ்க்கையை சரியான ஒரு நீரோட்டத்தில்கொண்டு செல்ல முடியாமல் போகும்.

தற்போதைய அரசாங்கமானது இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு புதிய வாழ்க்கைக்குதங்களை உட்படுத்தி வாழ்ந்து கொண்டு வரும் முன்னாள் போராளிகளை கைது செய்வதனைதவிர்த்து விட்டு கைது செய்து புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவேண்டிய அதாவதுபெரிய பெரிய குற்றங்களை செய்து விட்டு நல்லவர்கள் போன்று தங்கள்குடும்பங்களுடன் வெளியில் இருந்து கொண்டு உல்லாசமாக திரியும் முக்கியபுள்ளிகளை உடனடியாக கைது செய்து அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தும்வேலைத்திட்டங்களை இந்த அரசு செய்வேண்டும்.

இன்று எமது உறவுகள் இந்த நாட்டில் ஏற்பட்ட நிகழ்வுகளினால் இங்கு வாழ முடியாமல்வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்ற உறவுகள் மீண்டும்இங்கு வருவதற்கு இவ்வாறான கைதுகள் மிகுந்த அச்சத்தினை உண்டுபண்ணியிருக்கின்றது.

ஆகவே இவ்வாறான கைதுகள் மூலம் ஏனைய புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வீட்டில்உள்ளவர்களும், தமிழ் மக்களும் பய, பீதியுடன் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டியஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது எனவும் அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய புள்ளிகள் வெளியில்! புனர்வாழ்வு அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் விசாரணையா? கோடீஸ்வரன் பா.உ Reviewed by NEWMANNAR on April 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.