அண்மைய செய்திகள்

recent
-

விவசாய கற்றல் உபகரணக்கண்காட்சி இரண்டு நாள் நிகழ்வு-25-26-05-2016---முழுமையான படங்கள் இணைப்பு


இயற்கை வளத்தினை வளமாக பயண்படுத்தி
வளமாக வாழ்வோம் எனும் தொனிப்பொருளில்
இரண்டு நாள் நிகழ்வாக இன்று 25-26-05-2016 மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெறுகின்றது.
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயமும் மன்.அடம்பன் ம.ம.பாடசாலையும் இணைந்து இக்கண்காட்சியை நடாத்துகின்றனர்.

இக்கண்காட்சியின் நோக்கம்

  • இயற்கையான பசலையும் வளமும்
  • தூய்மையான நீரும் சுற்றாடலும்
  • இலகுவான கற்றல் செயற்பாடுகள்
மடு வலையத்தில் உள்ள 60 பாடசாலைகளினதும் மாணவர்களையும் மொத்தமாக 4000 மாணவர்கள் இக்கண்காட்சி மூலம் பயனடைவார்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

600 மாணவர்களினதும் 42 ஊழியர்களினதும் உழைப்பின் பயனாக காட்சி தருகின்றது இக்கண்காட்சி.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும்
தேசிய இயக்குநர் வாழ்வுதயம் ஜோர்ச் சிகாமணி அவர்களுடன்
சிறப்பு விருந்தினராக
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களுடன்
மன்னார் வாழ்வுதயஇயக்குனர் அருட்பணி.ஜெயபாலன் மற்றும் அருட்பணி சேவியர் அவர்களுடன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெற்றனர் நீங்களும் பயன்பெற கண்காட்சியினை காணவாருங்கள்.
































































விவசாய கற்றல் உபகரணக்கண்காட்சி இரண்டு நாள் நிகழ்வு-25-26-05-2016---முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on May 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.