அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட போது ஒலிக்காதகுரல்கள் தற்போது ஒலிக்ககாரணம் என்ன?

கிழக்கு பல்கலைகழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அமையும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தை அடுத்து சில தமிழ் சிங்கள இணையத்தளங்கள் சமூக வலைத்தளங்களில் மிக மோசமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று தேசிய பல்கலைகழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் , " சிங்கள மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது , எனவே இராணுவத்தினை விலக்க கூடாது இராணுவம் இருந்தால் தான் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு " என பொருள் பட உள்ளது இது மிக மோசமான அறிக்கை ஆகும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைகழக தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற மாணவர்களை கிழக்கு மாகாண ஆளுநரோ, எவரும் சென்று பார்க்கவில்லை . இவர்களுக்காக எவருமே குரல் கொடுக்கவில்லை

ஆனால் சிங்கள மாணவர்கள் தாக்க பட்ட போது எத்தனை குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன வடமாகாண ஆளுநர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெரும் மாணவனை பார்த்து உள்ளார்.

பல்கலைகழக மாணவர்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க என இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும் சில மாணவர்களை பயன்படுத்துகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு கல்வி கற்க வரும் சிங்கள மாணவர்கள் போர் வெற்றி சின்னங்களை கடந்தே வருகின்றார்கள். அந்த சின்னங்களை கடக்கும் போது அந்த மாணவர்களின் எண்ணங்களில் தமிழர்கள் தோற்றுப்போனவர்கள் என்ற எண்ணமே உருவாகும்.

அதுமாத்திரமின்றி வடக்கிலே பௌத்த சின்னங்களை அரசாங்கம் நிறுவுகின்றது. தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஏன் அவற்றை நிறுவ வேண்டும். சாம்பல் தீவில் இரவோடு இரவாக புத்தர் சிலை ஏன் வைக்க வேண்டும். கொக்கிளாயில் நீதிமன்ற தடையை மீறி தனியார் காணியில் பௌத்த விகாரை எவ்வாறு கட்டபப்டுகின்றது ? இரணைமடு குளக்கட்டு , நயினாதீவில் , பாரிய புத்தர் சிலை ஏன் நிர்மாணிக்க படுகின்றது. சிங்கள பிரதேசமாக தமிழர் பிரதேசத்தை உருவாக்கவா ?

இவற்றை எல்லாம் அரசாங்க செலவிலையே நிர்மானிக்கிண்றீர்கள் எதற்காக ?

இலங்கையில் 17 பல்கலைகழகங்கள் உண்டு அவற்றில் மூன்று பல்கலைகழகங்களே வடக்கு கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அதில் அம்பாறையில் உள்ள பல்கலைகழகம் முஸ்லீம் மாணவர்களை பெருமபான்மையாக கொண்ட பல்கலைகழகம் மற்றைய இரு பல்கலைகழகமான கிழக்கு பல்கலைகழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகம் என்பவற்றில் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையாக கற்று வந்தார்கள்.

அதனை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் நோக்குடனே கிழக்கு பல்கலைகழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகம் என்பவற்றுக்கு சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக உள்வாங்க படுகின்றார்கள்.

கிழக்கு பல்கலைகழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அமையும்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னால் நின்று இயக்கியவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிந்து தண்டிக்கிறதை விட மோதலை உருவாக்க காரணமானவர்கள் கண்டறிய ப்பட வேண்டும். என மேலும் தெரிவித்தார்.


கிழக்கு பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட போது ஒலிக்காதகுரல்கள் தற்போது ஒலிக்ககாரணம் என்ன? Reviewed by NEWMANNAR on July 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.