அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கும் நாம் கல்வி மூலமே எமது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்-றிப்கான் பதியுதீன்.

மன்னாரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்போது சொந்த இடங்களில் மீள் குடியேறி வரும் இடங்களில் ஒன்றாக காணப்படும் மன்னார் மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கி அமைக்கப்பட்ட குறித்த பாடசாலை இப்பிரதேசத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஓர் பொக்கிசம் என வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஜப்பான், மற்றும் யு.என்.ஹெபிட்டா ஆகிய நிறுவங்கள் வழங்கிய நிதியின் கீழ் சுகாதார வசதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு நவீன முறையில் மன்னார் வேப்பங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அல்-இக்ரா பாடசாலையை இன்று செவ்வாய்க்கிழமை(28) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

-இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

மீள் குடியேறி வரும் இடங்களில் ஒன்றாக காணப்படும் மன்னார் மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கி அமைக்கப்பட்ட குறித்த பாடசாலை இப்பிரதேசத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஓர் பொக்கிசமா காணப்படுகின்றது.
-இப்பாடசாலை குடிநீர் வசதி,மலசல கூட வசதி ,விளையாட்டு மற்றும் நவீன முறையில் அமைக்கப்பட்ட வகுப்பறைகள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.

சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் முயட்சியினால் பான்கிமூன் அவர்களின் உதவியின் மூலமாக 5 வருடங்கள் கழித்து இந்த பாடசாலை நிர்மானிக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்த கிராமங்களுக்கு நாங்கள் பாடசாலையினை பார்வையிட வருகை தந்த போது சாதாரண ஒரு கொட்டிலில் ஒழுங்கான கதிரை வசதிகள் கூட இல்லாது இப் பாடசாலை இயங்கி வந்தது.

ஆனால் இன்று நகரப்பகுதிகளையும் மிஞ்சிய வசதிகளுடன் இந்த பாடசாலை அமைந்திருப்பது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

இப் பாடசாலை அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் கடின முயட்சியிலும் பலரது கடின உழைப்பிலும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பாடசாலை என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

எனவே மாணவ செல்வங்களாகிய நீங்கள் இந்தப் பாடசாலையில் சிறந்த கல்வியை கற்க வேண்டும்.
நல்லதொரு புத்தி ஜீவிகளாகவும் பட்டதாரிகளாகவும் வர வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கும் நாம் இந்த கல்வி மூலமே எமது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வியை மாத்திரம் கற்றுக்கொடுக்காமல் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்றுக்கொடுங்கள்.

அதே போன்று பெற்றோர்களும் தனது பிள்ளைகளை கல்வியின் பக்கம் அதிக கவனம் செலுத்த வையுங்கள்.
ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது மட்டு மல்ல கல்வி.

பாடசாலை முடிந்து வீடு திரும்பும் உங்கள் பிள்ளைகளிடம் நாளாந்தம் நடைபெறும் விடயம் என்ன என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள் .

அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் என்ன செய்யலாம் என சிந்தியுங்கள் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.




இலங்கை நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கும் நாம் கல்வி மூலமே எமது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்-றிப்கான் பதியுதீன். Reviewed by NEWMANNAR on February 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.