அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டமும் வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கடும் வரட்சியின் காரணமாக 16 மாவட்டங்களை அரசு வரட்சி மாவட்டமாக பிரகடப்படுத்தி இருந்த போதும் கடுமையாக வரட்சியினால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தை வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தாமை குறித்து உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மன்னார் மாவட்டமும் தற்போது வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற
குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

-நாட்டில் ஏற்பட்ட கடும் வரட்சியின் காரணமாக விவசாயிகளின் விவசாயச் செய்கை கடுமையாக பாதீப்படைந்துள்ளது.
வரட்சியின் காரணமாக மன்னார் மாவட்ட விவசாயிகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததோடு பல ஏக்கர் விவசாயச் செய்கையும் பாதீப்படைந்நிருந்தது.

இதனால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்ட விவசாயிகள் பட்டினிச்சாவை எதிர் நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் 16 மாவட்டங்கள் வரட்சி மாவட்டமாக பிரகடப்படுத்தியது.

எனினும் கடுமையாக வரட்சியினால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தை வரட்சி மாவட்டமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தாத நிலை ஏற்பட்டிருந்தது.

அதற்கு காரணமாக வரட்சி ஏற்பட்டு பல நாட்களின் பின் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணத்தினால் மன்னார் மாவட்டம் வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தாத நிலை ஏற்பட்டிருந்தது.

-இதனால் பாதீக்கப்பட்ட விவசாயிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் வரட்சியினால் பாதீக்கப்பட்டு பட்டினிச்சாலை எதிர் நோக்கிய விவசாயிகளை நான் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்ததோடு பாதீப்படைந்திருந்த விவசாய செய்கைகளையும் நான் நேரடியாக பார்வையிட்டேன்.

இந்த நிலையில் அண்மையில் அரசாங்கத்தினால் 16 மாவட்டங்கள் வரட்சி மாவட்டமாக பிரகடப்படுத்தியது.எனினும் மன்னார் மாவட்டம் உள்ளடக்கப்படவில்லை.

இவ்விடையம் தொடர்பாக நான் உரிமை அமைச்சரின் வனத்திற்கு கொண்டு வந்ததோடு மன்னார் மாவட்டமும் கடுமையாக வரட்சியி
னால் பாதீக்கப்பட்ட மாவட்டமாக காணப்படுவதை சுட்டிக்hட்டியுள்ளேன்.

இதற்கு அமைவாக 17 ஆவது மாவட்டமாக மன்னார் மாவட்டமும் வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

-இதன் மூலம் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற வரட்சி நிவாரணங்கள் சமனான முறையில் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என பாராளுமன் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நிருபர்-
(28-2-2017)

மன்னார் மாவட்டமும் வரட்சி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Reviewed by NEWMANNAR on February 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.