அண்மைய செய்திகள்

recent
-

கேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’....


இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்கால் நந்திக்கடலின் நில அமைப்பை சற்று விரிவாக பார்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட விடையத்திற்கு வருகின்றேன். அதாவது இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பகுதியானது
அதன் மத்திய பகுதியிலிருந்து வடக்காக பெரும் கடற்பரப்பினையும், தெற்காக நந்திக்கடல் எனும் சிறுகடல் பகுதியையும், கிழக்காக வட்டுவாகல் முல்லைத் தீவையும், மேற்காக இரட்டை வாய்க்கால் புதுக்குடியிருப்பையும் அருகாகக்கொண்ட ஒரு கிராமமாகும்.

மேலும் முள்ளிவாய்க்காலின் தெற்காக உள்ள சிறுகடல் பகுதியைத்தான் நந்திக்கடல் என அழைப்பார்கள்’ இந்த நந்திக்கடலின் ஒருபக்கம் முள்ளிவாய்க்கால் ஓரமாகவும், அதன் மறுபக்கம் இன்று இலங்கை விமானப்படை தான் பறிமுதல் செய்துவைத்திருக்கும் கேப்பா புலவு கிராமத்தின் ஒரு பக்கமுமாகவே அமைந்திருக்கின்றது.
இனி விடையத்திற்கு வருகின்றேன். இந்த கேப்பா புலவு பிரதேசமானது எதற்காக சிறிலங்கா படைகளின் கேந்திர மையங்களில் ஒன்றாக மாற்றம்பெற்றதென்று? மேலும் இந்த நிலப்பகுதியை அறியாதவர்கள் இதன் காரணத்தை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை’ உண்மையில் கேப்பா புலவில் விடுதலைப் புலிகள் தாம் இருந்த காலப்பகுதியில்கூட அப்பகுதியை தமது கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாக வைத்திருக்கவுமில்லை’ புலிகளின் சாதாரண தளங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பகுதியில் முன்பு இருந்திருந்தது.

மேலும் புலிகள் பாவித்த அநேகமான தமது கேந்திர தளங்களையே சிங்களப் படைகளும் கடந்த காலங்களில் தாம் கைப்பற்றி தமது தளமாக மாற்றியமைத்ததே வரலாறு’ அப்படியிருக்க எதற்காக வன்னியின் பிரதான புலிகளின் தளங்களை கைவிட்டு சிங்களப் படைகள் ஒரு புதிய நிலப்பரப்பை தமது கேந்திர தளங்களில் ஒன்றாக மாற்றவேண்டும்?
தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் சென்ற அணியும், இசைப்பிரியா உள்ளடங்கலான அணியும் விடிகாலை நெருங்கியதால் மிக கடுமையான களச்சூழலுக்கு முகம்கொடுக்கவேண்டிய காரணத்தினால்தான் அவ்வணிகளை உள்ளடக்கிய சுமார் 300று வரையான போராளிகள் மிகவும் கடுமையாக எதிரிகளுடன் போரிடவேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்கொண்டிருந்தார்கள்.

மேலும் இந்த அணிகளில் அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக தரையிறங்க முற்பட்ட வேளைதான் எதிரிகளின் கரையோர அணிகளுடன் மிகக் கடுமையான போரை தொடுக்கவேண்டியதாயிற்று. இதனால் இந்த அணிகளில் சென்ற அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.

மேலும் இந்த கேப்பா புலவு நந்திக்கடல் ஊடாக புலிகள் முள்ளிவாய்க்காலிலிருந்து ஊடறுத்து செல்கிறார்கள் என்பதை அறிந்த சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து மிகக்கடுமையான செல் தாக்குதல்களை இப்பகுதியை இலக்குவைத்து தமது பலமுனைகளில் அமைந்திருந்த ஆட்லறி,பல்குழல்,மோட்டார் பீரங்கி தளங்களிலிருந்து சரமாரியாக குண்டுகளை பொழிந்துகொண்டிருந்தார்கள்.
இதனால் பல போராளிகள் வீரச்சாவினை தழுவியதுடன், காயப்பட்ட போராளிகள் அநேகமானோர் சுயநினைவின்றி மயக்கமுற்றிருந்தத காரணத்தினால் எதிரிகளிடம் அகப்பட்டும், எஞ்சிய பல போராளிகள் தம்மால் இயன்றவரை தம்மை தாமே அழித்தும் வீரச் சாவினை அணைத்துக்கொண்டார்கள்.

இதேவேளை இப்பகுதியல் காயங்களுடன் எதிரிகளிடம் பிடிபட்ட போராளிகளும் மேலும் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளடங்கலான சில பத்து போராளிகளும், இதைவிட ஐநாவின் ஏமாற்றப்பட்ட சரணடைவொன்றின் ஊடாக பிடிக்கப்பட்ட திரு நடேசன்,புலித்தேவன்,உள்ளடங்கலான பலநூறு போராளிகளும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பகுதியும் இந்த கேப்பா புலவுப் பகுதிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
மேலும் தலைவரின் இளைய மகனான “பாலச் சந்திரன்” மற்றும் “இசைப்பிரியா” ஆகியோர் உள்ளடங்கலான பல போராளிகள் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவுப்” பகுதியில் பிடிபட்டுத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

இதைவிட ஜநாவை நம்பிய சரணடைவு முள்ளிவாய்க்காலில் சாம்தியமற்றுப் போனதால்தான் பல்லாயிரம் காயப்பட்ட போரளிகளும் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகி இருந்தது’ இப்படி வெளியேறிய போராளிகள் பலநூறுபேரைத்தான் சிங்களப் படைகள் பிடித்து தற்போதுவரை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளார்கள்.

ஆகவே முள்ளிவாய்க்கால் பகுதியில்வைத்து எமது மக்கள்முன் பிடிக்கப்பட்டு சிங்களப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவு” இராணுவ தளத்தில் உயிருடனோ அன்றி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டோ அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்?என்பது ஒருபக்கம், மறுபக்கமாக முள்ளிவாய்க்காலை ஒருவேளை ஐநாவின் பரிசீலனை குழுவினர் பரிசீலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை சிங்களப் படைகள் மேற்குறிப்பிட்ட கேப்பா புலவு பகுதியில் “பாரிய மனித புதைகுழிகளை” ஏற்படுத்தியிருக்கலாம் என்ற உண்மை நிலையினை அனைவரும் உணர்ந்து கேப்பா புலவில் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஐநா கண்காணிப்பு குழு பார்வையிடவேண்டும் என வலியுறுத்தி படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களும்,தாயக மக்களும்,புலம்பெயர் உறவுகளும் பாரிய அளவிலான அழுத்தங்களை ஐநாவைநோக்கி கொடுத்தால் மட்டுமே கேப்பா புலவின் உண்மை நிலைவரம் வெளியில் தெரியவரும்.

கேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’.... Reviewed by Author on February 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.