அண்மைய செய்திகள்

recent
-

பரவிப்பாஞ்சான் நில மீட்பு; பிரதமர் தலையிட வேண்டும் அமைச்சர் விஜயகலா நேரில் வலியுறுத்து...


கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளவும் காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் பிர தமர் தலையிட வேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடு த்துள்ளார்.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று மாலை ஐ.தே.கவின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்,

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள பொது மக்களின் காணிகளை இரண்டு மாதத்திற்குள் விடுவிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி வழங்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இப்பகுதி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எதிர்க்கட் சித் தலைவர் இரா.சம்பந்தன் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்றபோதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

பின்னர் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொண்ட நான் இவ் விடயம் குறித்து எடு த்துக்கூறியதையடுத்து இரண்டு மாத காலத்துக்குள் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதாக உறுதி வழங்கப்பட்டது. இவ் விடயத்தை நான் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தெரிவித்ததையடுத்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டிருந்தனர். 

இந்த நிலை யில் உறுதியளித்தபடி காணிகள் விடுவிக்கப்படாமையினால் இப் பகுதி மக்கள் மீளவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எனவே இந்த விடயத்தில் பிரதமர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவ் விடயம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும்  அதற்கான விபரங்களை தருமாறும் பிரதமர் கூறியதையடுத்து அந்த விபரங்களையும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்   பிரதமரிடம் கையளித்துள்ளார்.    


பரவிப்பாஞ்சான் நில மீட்பு; பிரதமர் தலையிட வேண்டும் அமைச்சர் விஜயகலா நேரில் வலியுறுத்து... Reviewed by Author on February 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.