அண்மைய செய்திகள்

recent
-

பேரழிவை ஏற்படுத்திய டோரிஸ் புயல்: கடுமையாக பாதிக்கப்பட்ட இயல்பு நிலை


பிரித்தானியாவில் வீசிய டோரிஸ் புயலால் இயல்பு நிலை கடுமையாக பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் மத்திய பகுதியில் டோரிஸ் புயல் மணிக்கு 94-ல் இருந்து 100 கி.மி வரை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சக்தி வாய்ந்த காற்று காரணமாக விமான சேவைகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்தின் வடபகுதியில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக் பொதுமக்கள் கடும் அவஸ்தையில் தள்ளப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் மரம் சாய்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. M48 Severn பாலம் மூடப்பட்டிருந்தது தற்போது திறக்கப்பட்டுள்ளது. Heathrow விமான நிலையத்தில் இருந்து 77 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், காலநிலை காரணமாக 10 விழுக்காடு விமான சேவைகள் முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல பகுதிகளிலும் புயலால் காயமேற்பட்ட பலரும் ஆம்புலன்ஸ் வசதி கேட்டு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய பனிப்பொழிவும் இருக்க கூடும் என வானிலை ஆய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.

வார இறுதி முழுவதும் பலத்த காற்றும் மழையும் தொடரக் கூடும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் டோரிஸ் புயல் போன்று அதே அளவு தாக்கம் இருக்காது எனவும் அறிவித்துள்ளனர்.



பேரழிவை ஏற்படுத்திய டோரிஸ் புயல்: கடுமையாக பாதிக்கப்பட்ட இயல்பு நிலை Reviewed by Author on February 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.