அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் அதிகளவு மதுபான விற்பனை நிலையங்கள்....


மட்டக்களப்பில் அதிகளவு மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்த நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பில் அதிகளவில் மதுபானசாலைகள் காணப்படுகின்றன.

மக்களின் எதிர்ப்பையும் மீறி மட்டக்களப்பில் மதுபான உற்பத்திசாலையொன்று நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

அதற்பு பதிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய உற்பத்திச்சாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன் என வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அதிகளவு மதுபான விற்பனை நிலையங்கள்.... Reviewed by Author on March 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.