அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இறந்தவர்களை தகனம் செய்வதை நிறுத்துமாறு ஊர் மக்கள் எதிர்ப்பு....


யாழ் - புத்தூர் கலைமதி கிராமத்தில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள மயானத்தில் இறந்தவர்களை தகனம் செய்வதை நிறுத்துமாறு ஊர் மக்கள் ஒன்று கூடி கடந்த இரண்டு நாட்களாக தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

குறித்த மக்களின் எதிர்பையடுத்து இன்று (09) நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்குமார் உத்தரவுக்கு அமைய மயானம் நிரந்தரமாக மூடபட்டுள்ளது.

அத்துடன், மயானத்தை அண்டிய பகுதியில் வன்னிப் போருக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறிய காணி இல்லாத மக்களுக்கு பிரதேசத்தில் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் காணிகள் வழங்கபட்டிருந்தது.

சுகாதார மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததுடன் சில சிறுவர்கள் நோய்த் தாக்கங்களுக்கும் உள்ளாகி இருந்தனர்.

 இதனை கருத்தில் கொண்டு குறித்த மயானத்திற்கு அருகில் குடியேறிய மக்களின் நன்மை கருதி எந்த ஒரு சடலமும் தகனம் செய்வது இல்லை என்று தீர்மானிக்க பட்டிருந்தது.

இதற்கு மாற்றீடாக அருகில் இருக்கும் மாயனங்களை பயன்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் அயல் கிராம மக்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டிருந்தது.

 இதனை மீறி தகனம் செய்ய கொண்டு வரப்பட்ட சடலமும் முன்னர் ஒரு தடவை இளைஞர்களால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அயல் கிராமத்தை சேர்ந்த வயோதிப பெண் ஒருவரின் சடலத்தை மாயனத்தில் தான் எரிப்போம் என்று ஒருசிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதனை ஊர் மக்கள் ஒன்று கூடி எதிர்த்துள்ளனர்.

 சடலத்தை எரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அயல் கிராமத்தை சேர்ந்த சிலர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் இந்த விடயத்தை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்குமார் குறித்த மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி வழங்கியுள்ளர்.

நீதிமன்ற அனுமதியை ஏற்றுக்கொள்ளாத ஊர்மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு இன்று நேரில் வந்து மல்லாகம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்குமார் மயானத்தை பார்வையிட்டு மக்களுக்கு பாதிப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு மயானத்தில் இனிவரும் காலங்களில் எந்த சடலம் எரிக்க முடியாது என்று நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 கடந்த இரண்டு நாட்களாக மக்கள் தங்கள் நாளாந்த பணிகளை நிறுத்தி விட்டு இந்த மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் மயானத்திற்காக குரல் கொடுத்து வந்து வெற்றி கண்டுள்ளனர்.

 மேலும், மயானத்தை எதிர்வரும் காலத்தில் சிறுவர் விளையாட்டு திடலாக மாற்ற தீர்மானித்துள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் இறந்தவர்களை தகனம் செய்வதை நிறுத்துமாறு ஊர் மக்கள் எதிர்ப்பு.... Reviewed by Author on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.