அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் உரிமைக்காக போராடும் அமைப்புக்களுக்கான கோரிக்கை.....


தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்கள் தனித்து 2009 இனப்படுகொலையை மட்டும் முன்வைக்காது இன்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாகவும் முன்நிறுத்தி அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் தொரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்கள் தற்போது எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளும் மற்றும் அது தொடர்பிலான தீர்வுகள் பற்றியான கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


இதற்கு அரசியல் தஞ்சக் கோரிக்கை தரவுகளே சிறந்த ஆதாரமானவை. ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கையே அங்கு மனித உரிமைகள் சித்திரவதைகள் நடந்தேறியமைக்கான சிறந்த சான்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா அரசாங்கம் அகதித்தஞ்சம் வழங்குதல் தொடர்பான சட்டங்களில் காலத்துக்குக்காலம் பல்வேறு வகையான மாற்றங்களை அமுல்படுத்தி வருகின்றது.


இந்த வகையில் அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் அது தொடர்பில் புலம்பெயர் தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வழங்கக்கூடிய பங்களிப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.


பிரித்தானியா தமிழ் தகவல் நடுவம் (TIC) ஏற்பாடு செய்த மேற்படி பயன்தரு கலந்துரையாடலில் மஞ்ஜித் எஸ் கில் ((Head of the International Human Rights Law Group at No5 Chambers) ஜோன் ரொத்வெல் (Senior Barrister & Head of the Immigration, Asylum and Nationality Group at No5 Chambers) (அருண்கணநாதன் (Barrister, Birmberg, Peirce & Partners) மற்றும் குலசேகரம் கீதார்த்தனன் (Human Rights Lawyer) ஆகிய சட்ட நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கியுள்ளனர்.


மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழ் தகவல் நடுவத்தின் ரதகுமார் தலைமையுரையினை வழங்கினார்.

இதில் தமிழ் தகவல் நடுவத்தின் ஆரம்பம் மற்றும் செயற்பாடுகள் பற்றி விளக்கிய அவர் நேற்றைய நிகழ்விற்கு காரணகர்த்தாவாகிய குலசேகரம் கீதரதனனுக்கும் தனது நன்றிகளை தொரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைத்தமிழர்கள் தொடர்ந்தும் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகிறார்கள். அவர்களது மனித உரிமைகள் அரசியல் நிலைப்பாடுகள் பலவகைகளில்

முடக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைய அடுத்து உரையாற்றிய மனித உரிமைகள் வழக்கறிஞர் குலசேகரம் கீதரதனன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்கள் அகதித் தஞ்சக் கோரிக்கை புள்ளி

விபரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அகதித்தஞ்சம் தொடர்பில் ஒருவர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள் அது தொடர்பிலான சட்ட விளக்கங்கள் மற்றும் அவைகள் தொடர்பில் அமைப்புக்களின் பங்களிப்புக்கள்

பற்றிய விரிவான விளக்கவுரையினை வழங்கியுள்ளார்.

அதில் அவர் அரசியல் தஞ்சம் என்பது ஐக்கியநாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட 1951 ஆவது சட்ட ப்பிரகாரம் இனம் மதம் தேசியம் குழுவின் அங்கத்துவம் மற்றும் அரசியல்

ஈடுபாடு ஆகிய 5 அடிப்படை அம்சங்களுக்குள் ஒன்றினில் உட்பட்டால் மாத்திரமே கோரமுடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் அகதித்தஞ்சக்கோரிக்கையில் 36 வீதமானவையே நேரடியாக உள்நாட்டு அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் 54 வீதாமன கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு மீதம் 10 வீதமானவை தாமாக முன்வந்து விலகி சென்றவையாகவும், அத்தோடு மேன்முறையீட்டுக்கு செல்லும், வழக்குகளில் 31 வீதமானவையே நீதிமன்றங்கள்ளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இறுதியில் அகதித்தஞ்சக் கோரிக்கைகளில் 49 வீதமானவை ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் மீதம் 51 வீதமானவை நிராகரிக்கப்படுவதாகவும் புள்ளிவிபரம் தொடர்பில் அவர் விளக்கினார்.

மேலும் 5 வருடகால அகதி அந்தஸ்து கிடைத்தவர்கள் குற்றச்செயல்களில் நாட்டின் சட்டதிட்டங்களை மீறாதவகையில் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

அவர் அவ்வாறு ஒருவர் செய்யும் தவறு ஏனைய அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்களையும் பாதிக்கும் என குறிப்பிட்டர்.

இறுதியாக அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள தாழ்வுமனப்பாண்மையிலிருந்து விடுபட்டு சிறப்பான உயர்வுகளை எட்டவேண்டும் என கோரிய அவர் கல்வி உரிமைக்காக போராடி

சிறுவயதிலேயே நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் பிரித்தானியா மகாராணியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை உதாரணம் காட்டி தனது உரையினை நிறைவு செய்துள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய ஜோன் ரொத்வெல் தற்போது உள்ள உள்நாட்டு அலுவலக அறிக்கையின் பிரகாரம் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுபவர்கள் அந்த நாட்டிற்கு செல்வதில் அச்சுறுத்தல் உள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அகதித்தஞ்ச நேர்முகத்தின் போது கோரிக்கையாளர் இலங்கை தமிழா அல்லது இந்தியா மற்றும் ஏனைய நாட்டு தமிழா என்பதை உறுதிப்படுத்த சில நேரங்களில் நேர்முகையாளரினால் அவரது நாட்டில் உள்ள அடயாளங்கள் அல்லது நாணய வடிவங்கள் ஊடகங்களின் பெயர்கள் தொடர்பிலும் வினவப்படும்.

அத்தோடு அகதித் தஞ்சக்கோரிக்கை என்பது முற்றிலுமாக நம்பகத்தன்மையிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஒருவர் பல சிரமங்களுக்கு மத்தியில் அகதி அந்தஸ்தை பெற்றாலும் அதனை நிரந்தரமாக கொள்ளமுடியாது மஞ்ஜித் எஸ் கில் கூறியுள்ளார்.


மேலும் சில சர்ந்தப்பங்களில் மிக இலகுவாக அதனை இழக்கின்ற சர்ந்தப்பங்களும் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

அவர் அகதி தஞ்சத்தை முடிவுக்கு கொண்டுவருதல் அல்லது விலக்கி வைத்தல் ஆகிய இரு முறைமைகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.


தற்போதைய அரசாங்கங்கள் மனித உரிமைகள் சம்பந்தமாக பாதுகாப்பு தேடிவருவோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட தங்குமிட அனுமமதியைத்தான் வழங்க வேண்டுமென்ற புதிய நடைமுறையை கடைப்பிடிப்பதாக தெரிவித்த அவர் இதன் விளைவாகவே குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒருவரின் அகதி அந்தஸ்தை மீளாய்வு செய்யவேண்டும் என்ற நடைமுறைகளை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து இறுதியாக உரையாற்றிய அருண்கணநாதன் தற்போது உலக மயம் என்பது மாறி குறுந்தேசிய மயம் என்ற நிலை உருவாகி விட்டது. குறுந்தேசிய வாதிகளின் கைகளிலேயே ஆட்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன.

ஆதன் ஒரு விளைவாகவே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற ஒரு தீர்மானம் வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இருக்கின்றது. இதனால் அங்கு பிரச்சினைகள் இல்லை என்று கூறுகிறார்களார்.

ஆனால் இலங்கையிலிருந்து வரும் மனித உரிமை அறிக்கைகள் தற்போதும் அங்கு தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு வருவதாக பரவலாகவும் திட்டமிடப்பட்டும் தமிழர்களுக்கு எதிராக

சித்திரவதைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடுகின்றன என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அகதி அந்தஸ்து விண்ணப்பிப்பவர்கள் தொடர்பில் Country Guidance ( CG ) என்ற வழக்கே இன்றும் முதன்மை வழக்காக உள்ளது என குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 2013 இல் நீதிமனற்றம், இங்கை மனித உரிமை தொடர்பில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து 100 க்கு மேற்பட்ட பக்கங்களில் மேற்படி தீர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் உரிமைக்காக போராடும் அமைப்புக்களுக்கான கோரிக்கை..... Reviewed by Author on March 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.